தொடக்கப் பள்ளி கட்டுமானம் 2015

யோக்சியர் வாழ்தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட அமைப்பான ‘ யோக்சியர் தமிழ் சமூகம் தாயகதை நோக்கிய தனது வேலைத்திட்டங்களை ஆராயும் போது ( எழுத்தறிவித்தவன் இறைவன் ) என்பதற்க்கு அமைய அவர்களின் தெரிவும், எமது சந்ததியின் கல்வி நோக்கியதாக இருந்தது . எங்கே தொடங்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது, தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத காயங்களையும் பேர் அழிவையும் தாங்கிய இடமான ஆனந்தபுரம் தெரிவானது. இவ் ஆனந்தபுரத்திலேதான் எதிரியானவன் எமது வீரமிகு தளபதிகள், போராளிகளையும் யுத்தத்திற்கு புறம்பான இரசாயன குண்டுகளை (உலக நாடுகளால் தடைசெய்யபட்ட குண்டுகள் ) பயன்படுத்தி கொன்றான். எமது தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கூறியது போல் , ஒரு இனத்தை அழிப்பதற்கு எதிரியானவன் அவ்வினத்தின் கல்வி,கலை,கலாச்சாரம் மற்றும் வரலாறு என்பவற்றை அழித்தாலே , அவ்வினம் பாதி அழிந்ததுக்கு சமன் , ஒரு மனிதனின் வரலாறு அவனது ஆரம்ப பள்ளியில் இருந்தே தொடங்குகிறது ஆகவே எமது தெரிவும் கல்விக்கே தொடக்கபுள்ளியான முன்பள்ளி தெரிவானது.அந்தவகையில் யுத்தத்தினால் அழிந்து துளிர்விட்டுக்கொண்டிருந்த ஆனந்தபுரம் துஷாந் முன்பள்ளி தெரவு செய்யப்பட்டது . ஒரு மாவீரனின் பெயரே இந்த துஷாந். யோ. த. சமூகத்தினால் ஆரம்பிக்கபட்ட முதலாவதும் நிலையானதும் ஆன வேலைதிட்டம், துஷாந் முன்பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்டி தருவது என்பது. இந்தவகையில் யோ. த. சமூகத்தின் முதலாவதும் நிலையானதும் வேலைதிட்டம் தனது என்பதை கர்வத்தோடு தனதாக்கிக்கொண்டது துஷாந் முன்பள்ளி. துஷாந் முன்பள்ளி 40அடி நீலமும் ,20அடி அகலமும் கொண்ட முழுமையான கட்டிடமாக நிமிர்ந்து நிக்கின்றது ,யோ. த. சமூகத்தின் பெயர் சொல்லி. இவ்வேலை திட்டத்தை செய்து முடிக்க தேவையான நிதி எமது உறவுகளின் கடைகளில் உண்டியல் வைத்து அதன் மூலம் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் கட்டப்பட்டது.. அதுமட்டுமின்றி உண்டியலை வைத்து எடுத்து நிதியை சேகரித்த எமது உறுப்பினர்களுக்கு நன்றி, இதேவேளையில் எமது வேலைதிட்டத்துக்கு செயல் வடிவம் கொடுத்த தாயக உறவுகளுக்கும் நன்றி. . ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நன்றி. ஆக்கம் ரூபன் .