யோக்சியர் தமிழ்ச் சமூகம் முன்னெடுத்துச் செல்லும் தமிழர் வழிபாட்டு மைய திட்ட வரைவு

வாங்கப்படவுள்ள வளாகத்தில் முருகன் கோயிலும், மாதா சிலையும், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியும் அமைக்கப்படவுள்ளன. அத்துடன், ஏற்கனவே அங்கு முதலாம் உலகப் போர் நினைவுத் தூபி ஒன்று அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.

 யோக்சியர் தமிழர் வழிபாட்டு மையம்  நிதி திரட்டல் மற்றும் பங்குரிமைத் திட்டம்

திட்டத்தின் நோக்கம்

யோக்சியர் வாழ் தமிழ் மக்களின் வழி விழுமியங்கள் மற்றும் சமூக ஒன்றுகூடல்களை மேம்படுத்த முருகன் கோயில், மாதா சிலை மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உள்ளடங்கலாக ஒரு நிரந்தர மையத்தை (£400,000 மதிப்பீட்டில்) உருவாக்குதல்.

பங்குரிமைத் திட்டம் (Share Scheme)

 * பங்கின் மதிப்பு: ஒரு பங்கு £1,000.

 * யார் வாங்கலாம்?: தமிழ் குடும்பங்கள் அனைவரும் இதில் பங்குதாரர்களாக இணையலாம்.

 * தவணை முறை வசதி: ஒரேடியாக செலுத்த முடியாதவர்கள் மாதம் £30 வீதம் 36 மாதங்களுக்குச் செலுத்தி ஒரு பங்கைப் பெற்றுக்கொள்ளலாம்.

 பங்குதாரர்களுக்கான நன்மைகள்:

 * உரிமை: மையத்தின் சொத்துக்களில் சட்டப்பூர்வமான பங்குதாரராக அங்கீகரிக்கப்படுவீர்கள்.

 * வாக்குரிமை: நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை.

 * நிர்வாகத் தகுதி: மையத்தின் பொறுப்புகளுக்குப் போட்டியிடும் தகுதி.

 

 ️ பாதுகாப்பு மற்றும் சட்ட அங்கீகாரம் (CBS & FCA)

இந்த மையம் பிரித்தானிய சட்டப்படி ‘Community Benefit Society’ (CBS) ஆகப் பதிவு செய்யப்படும். இது FCA (Financial Conduct Authority) அமைப்பினால் கண்காணிக்கப்படும்.

 * ஜனநாயகக் கட்டுப்பாடு: “ஒரு நபர் – ஒரு வாக்கு”. அதிக பணம் முதலீடு செய்தாலும் அனைவருக்கும் சமமான அதிகாரமே இருக்கும்.

 * தனிப்பட்ட பாதுகாப்பு (Limited Liability): மையத்திற்கு ஏதேனும் கடன் சுமை ஏற்பட்டால், அது உங்கள் தனிப்பட்ட சொத்துக்களைப் பாதிக்காது. உங்கள் பொறுப்பு நீங்கள் முதலீடு செய்த £1,000 உடன் சரி.

 * சொத்துப் பாதுகாப்பு (Asset Lock): இந்த மையத்தை எதிர்காலத்தில் விற்று பணத்தைப் பங்குதாரர்கள் பிரித்துக்கொள்ள முடியாது. இது தமிழ்ச் சமூகத்தின் நிரந்தரச் சொத்தாகவே இருக்கும்.

 நிதி திரட்டும் நிலைகள்

 * முதலாம் நிலை:  ஆரம்பகட்ட நிதியாக 30 குடும்பங்களிடமிருந்து தலா £5,000 வீதம் மொத்தம் £150,000 சேகரிக்கப்படும். இது 150 பங்குகளுக்குச் சமமானது. இதில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு பங்கு (£1,000) வழங்கப்படுவதுடன், எஞ்சிய தலா £4,000 (மொத்தம் £120,000) கடனாகப் பெறப்படும்.

 * இரண்டாம் நிலை: ஏனைய குடும்பங்களிடமிருந்து பங்குகள் (£1,000) விற்பனை செய்யப்படும்.

 * கடனைத் திருப்பிச் செலுத்தல்: ஆரம்பத்தில் கடனாகப் பெறப்படும் தொகை, புதிய பங்குகள் விற்பனை மூலமோ அல்லது வங்கி மூலம் கடன் பெற்றோ 3 ஆண்டுகளுக்குள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

வெளிப்படைத்தன்மை

 * ஒவ்வொரு பங்குதாரருக்கும் முறையான பங்குச் சான்றிதழ் (Share Certificate) வழங்கப்படும்.

 * நிதி வரவு-செலவு கணக்குகளை இணையதளம் அல்லது மாத அறிக்கைகள் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Leave a comment